தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா,தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும். இங்கு நடக்கும் தசரா திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கொடியேற்றம்: இன்று கொடிப்பட்டம் யானை மீது உலா வந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10 ம் நாள் விழா : திருவிழாவில் முக்கிய நாளான அக்., 10 ல் காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடக்கும். இரவு 7 மணிக்கு அம்மன் கடற்கரை வளாகத்தில், சிம்மவாகனத்தில் எழுந்தருளுவார். இரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
11 ம் நாள்விழா: அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
கொடியேற்றம்: இன்று கொடிப்பட்டம் யானை மீது உலா வந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காப்பு கட்டிய பக்தர்கள்: தசரா திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றம் நடந்த பின்பு கடற்கரையில் குளித்துவிட்டு விரதம் இருக்க காப்பு கட்டிக் கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கும். திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். அம்மன் பல்வேறு திருக்கோலத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
11 ம் நாள்விழா: அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
No comments:
Post a Comment