உடன்குடி,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தென்னக ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;–
சிறப்பு ரெயில்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 7–ந்தேதி (வெள்ளிக்கிழமை) வண்டி எண் 82601 சுவிதா என்ற சிறப்பு ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05–க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடைகிறது. 8–ந்தேதி (சனிக்கிழமை) இரவு 10.45 மணிக்கு வண்டி எண் 82603 சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடையும்.
நெல்லையில் இருந்து...
மறுமார்க்கத்தில் வருகிற 11–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை சென்னை எழும்பூர் சென்றடையும். 12–ந்தேதி நெல்லையில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13–ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.
கடந்த ஆண்டு தசரா திருவிழாவையொட்டி ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment