Thursday, October 13, 2016
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 10-10-2016 (திங்கட்கிழமை) அன்று இரவில் சூரசம்ஹாரம் நடந்தது .சூரனை வதம் செய்யும் காட்சியை பக்தர்கள் கண்டு அம்மனை தரிசித்தனர் .ஓம் காளி ஜெய் காளி என கோஷம் எழுப்பினர்
அதன் பின் 11–ம் திருநாளான மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடந்தது . 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடந்தது . 3 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அம்மன் திருத்தேரில் பவனி வருகிறார்.
அதிகாலை 5 மணிக்கு சவுந்திரபாண்டிய நாடார்– தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடந்தது . காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்பாடு நடந்தது . மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . மாலை6.00 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரம் திருக்கோவில் வந்தது . மாலை 6.10 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடந்தது
12–ம் திருநாளான 12–ந்தேதி (புதன்கிழமை) காலையில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது . மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது .

உடன்குடி பகுதிகளில் தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிலைகள்
உடன்குடி குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு உடன்குடி பகுதிகளில் அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உடன்குடி தேரியூர் தசரா குழு சார்பில் திசையன்விளை மெயின் ரோட்டில் அம்மன் தலையை அங்கும் இங்கும் அசைப்பது போன்ற சிலைகளும், சூரனை வதம் செய்வது போன்ற சிலைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
அதே போல் உடன்குடி ஞானியார் குடியிருப்பில் அம்மன் சிலை கண் மூடி திறப்பது போன்ற சிலைகளும், தாண்டவன்காடு பகுதி, தெற்கு தாண்டவன் காடு பகுதிகளில் சூரனை சிங்கம் கடித்து குதறுவது போன்ற சிலையும், அம்மன் ஈட்டியால் சூரனை வதம் செய்வது போன்ற சிலையும் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த சிலைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை 10-10-2016 (திங்கட்கிழமை) இரவில் சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை (திங்கட்கிழமை) இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
முன்னொரு காலத்தில் தன்னை அவமரியாதை செய்த வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என்று அகத்திய மாமுனிவர் சாபமிட்டார். எருமை தலையும், மனித உடலும் பெற்ற வரமுனி பின்னர் தனது விடாமுயற்சியால் பற்பல வரங்களை பெற்று அசுரனாக மாறி, முனிவர்களை துன்புறுத்தினார். மகிஷாசுரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசுரனை அழித்த 10–ம் நாள் தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வேடம் அணிந்த பக்தர்கள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 1–ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, பல்வேறு வேடங்களை அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் பந்தல் அமைத்து குழுவாக தங்கியிருந்து, அம்மன் புகழ்பாடி வழிபடுகின்றனர்.
மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, ராமர், லட்சுமணர், கிருஷ்ணர், பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான், அனுமார் போன்ற சுவாமிகளின் வேடங்களையும், அரக்கன், கரடி, சிங்கம், புலி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அதனை 10–ம் திருநாள் இரவில் கோவிலில் செலுத்துவார்கள். தசரா திருவிழாவை முன்னிட்டு கிராமங்கள்தோறும் தசரா குழுவினரின் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டி உள்ளது.
பக்தர்கள் குவிந்தனர்
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகம், கடற்ரை பகுதிகளில் பக்தர்கள் தங்கி உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாளை, சூரசம்ஹாரம்
10–ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.
11–ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 3 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அம்மன் திருத்தேரில் பவனி வருகிறார்.
அதிகாலை 5 மணிக்கு சவுந்திரபாண்டிய நாடார்– தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுகிறார். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோவில் வந்து சேர்கிறார். மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12–ம் திருநாளான 12–ந்தேதி (புதன்கிழமை) காலையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான அன்னக்கொடி, இணை ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

Saturday, October 1, 2016
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை
திசையன்விளை,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதமிருந்து பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கிராமம், கிராமமாக சென்று காணிக்கை பெற்று கோவிலில் செலுத்துவது வழக்கம்.
வேடப்பொருட்கள் விற்பனை...
தசரா திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதால் வேடம் அணியும் பக்தர்களுக்கு என பல்வேறு வகையான பொருட்கள் திசையன்விளை பஜாரில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது. அம்மன் கிரீடங்கள், காளி, விநாயகர், அனுமன், ராஜா, ராணி, குரங்கு, கரடி, புலி, சிங்கம் என பல்வேறு வகையான வேட பொருட்கள் திசையன்விளை பஜாரில் உள்ள கடைகளில் விற்பனைக்காக குவிந்துள்ளன. ரூ.50 முதல், ரூ.5 ஆயிரம் வரையிலும், பல வண்ண கலர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன. வேடம் அணியும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மும்முரமாக வாங்கி செல்கின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக 2 சிறப்பு ரெயில்கள்
உடன்குடி,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தென்னக ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;–
சிறப்பு ரெயில்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 7–ந்தேதி (வெள்ளிக்கிழமை) வண்டி எண் 82601 சுவிதா என்ற சிறப்பு ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05–க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடைகிறது. 8–ந்தேதி (சனிக்கிழமை) இரவு 10.45 மணிக்கு வண்டி எண் 82603 சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்தடையும்.
நெல்லையில் இருந்து...
மறுமார்க்கத்தில் வருகிற 11–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை சென்னை எழும்பூர் சென்றடையும். 12–ந்தேதி நெல்லையில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13–ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும்.
கடந்த ஆண்டு தசரா திருவிழாவையொட்டி ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தசரா திருவிழா ; குலசேகரப்பட்டினத்தில் இன்று கொடியேற்றம் பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா,தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும். இங்கு நடக்கும் தசரா திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கொடியேற்றம்: இன்று கொடிப்பட்டம் யானை மீது உலா வந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10 ம் நாள் விழா : திருவிழாவில் முக்கிய நாளான அக்., 10 ல் காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடக்கும். இரவு 7 மணிக்கு அம்மன் கடற்கரை வளாகத்தில், சிம்மவாகனத்தில் எழுந்தருளுவார். இரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
11 ம் நாள்விழா: அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
கொடியேற்றம்: இன்று கொடிப்பட்டம் யானை மீது உலா வந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காப்பு கட்டிய பக்தர்கள்: தசரா திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றம் நடந்த பின்பு கடற்கரையில் குளித்துவிட்டு விரதம் இருக்க காப்பு கட்டிக் கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடக்கும். திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். அம்மன் பல்வேறு திருக்கோலத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
11 ம் நாள்விழா: அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். மாலை 6மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
Subscribe to:
Posts (Atom)