மாடசாமி என்பவர் நெல்லை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த ஒரு
போலீஸ்காரர். ஒரு தடவை அவர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்காக காவல்
பணி மேற்கொள்ள சென்றிருந்தார். தரிசனத்துக்கு வரிசையில் நிற்கும் பக்தர்களை
கண்காணிëத்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆடல்,பாடல்
என ஆரவாரமாக வந்த பக்தர்களை சமாளிëக்க முடியாமல் அவர் திணறியபடி
இருந்தார். அப்போது பரமசிவன் வேடம் அணிந்து வந்த பக்தர் ஒருவர்
கூட்டத்தினுள் அதிரடியாகப் புகுந்தார். இதனைëக்கண்டு கோபம் அடைந்த காவலர்
மாடசாமி சிவன் வேடமணிந்த அந்த பக்தரை இழுத்துத் தள்ளினார். இதனால் நிலை
குலைந்து போன அந்த பக்தர் கீழே விழுந்து காயமடைந்தார்.
இந்த
சம்பவம் நடைபெற்ற அன்றிரவு, காவலர் மாடசாமிக்கு திடீரென்று வயிற்றுவலி
ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்த்தும் அந்த வலி மறையவே
இல்லை. நாட்கள், மாதங்கள் என்று கடந்தும் வலி மட்டும் குணமாகவே இல்லை.
இறுதியில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.
அறுவைச்
சிகிச்சை செய்தால் மட்டுமே இந்நோய் தீரும் என்று மருத்துவர்கள்
கூறிவிட்டனர். இதைக்கேட்டு மாடசாமியின் மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்போது திடீரென்று அவருக்கு அம்பாளின் அருள் வந்தது.
சாமி
ஆடியபடி அவர் மிகுந்த ஆவேசத்துடன் தன் கணவரை நோக்கி, "மகனே! இந்நோய்
உனக்கு எதனால் ஏற்பட்டது என்று இன்னும் புரியவில்லையா தசரா விழாவின் போது
எனது பக்தன் ஒருவனைக்கீழே தள்ளி அவன் மனம் நோகும்படிச் செய்தாயே,
நினைவில்லையா அதனால் தான் இந்த நோய்க்கு நீ ஆட்பட்டுள்ளாய். குலசைக்கு
வந்து என் பாதம் பணிந்து வணங்கு உன் நோய் குணமாகும்'' என்று கூறினார்.
இதைக்கேட்டதும்
திகைத்துப்போன மாடசாமி உடனே மருத்துவர்களிடம் "தனக்கு அறுவைச் சிகிச்சை
வேண்டாம்'' என்று கூறி விட்டு, குலசைக்கு ஓடினார். அன்னையை மனமுருகி
வேண்டி, தரிசனம் செய்து, அர்ச்சகரிடம் விபூதி பெற்றார். அதன் பின்னர் தான்
அந்த அதிசயம் நடந்தது.
முத்தாரம்மன் ஆட்கொண்டதால்
அவரை வருத்திக் கொண்டிருந்த வயிற்று வலி முற்றிலுமாகக்குணமானது. அது முதல்
ஆண்டு தோறும் காப்புக்கட்டி, விரதமிருந்து, சிவன் வேடமணிந்து அன்னையின்
அருளை மாடசாமி பெற்றார்.
No comments:
Post a Comment