குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் அலங்கார பொருட்கள் வாங்க மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தசரா திருவிழா
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை கோலாகலமாக்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழாவாகும். இந்த திருவிழா வருகிற 13–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேடம் அணியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுக்கு தேவையான வேடம் அணியும் பொருட்களை தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். சிலர் தங்களது உடல் அளவுகளை கொடுத்து அதற்கு தகுந்தபடி பொருட்களை தயாரிக்கின்றனர்.
எந்த வேடம் அணிந்தாலும் அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வேடங்களை பார்க்கும் போது பார்க்கின்றவர்கள் பரவசம் அடைய வேண்டும் என்பதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தனிக்கவனம் செலுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மும்முரம்
குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி பரமன்குறிச்சி பகுதியில் தசரா பக்தர்களுக்காக புதிதாக பல கடைகள் தோன்றி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான கடைகளில் தசரா பக்தர்களுக்காக தசராவுக்கு தேவையான பொருட்களுக்கு முன்னிலை படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். உடன்குடி வட்டார பகுதிகளில் தற்போது சிகப்பு மற்றும் மஞ்சள் ஆடைகள் அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் திரும்பிய திசையெல்லாம் தெரிகின்றனர். இதைப் போல இவர்கள் தங்களுக்குத் தேவையான வேடம் அணியும் பொருட்கள் வாங்குவதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment