குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் புகழ்பெற்ற தசரா திருவிழா... இந்தத் திருவிழாவுக்குப் பல்வேறு
ஊர்களிலிருந்து பக்தர்கள் வேடமணிந்து தனியாகவும், குழுவாகவும் வந்து
நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தசராக் குழுவை பொறுத்தவரை முன்பு உடன்குடி
வட்டாரத்தில் உள்ள ஒரு சில ஊர்களில்தான் இருந்தது. ஆனால் இன்று நெல்லை,
தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கான தசராக் குழுக்கள்
உள்ளன. புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழா. இந்த 10
நாட்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லாரிகள்,
குட்டியானைகளுக்குக் கடும் கிராக்கியாக இருக்கும். இந்தக் குழுவினர்
லாரிகளிலும் குட்டியானைகளிலும் ஏறிக்கொண்டு, ''ஓம் காளி.. ஜெய் காளி...
எங்கம்மா முத்தாரம்மா... குலசை அம்மா முத்தாரம்மா!'' என்ற கோஷத்தோடு ஊர்
ஊராகச் சென்று செட் அடித்து காணிக்கை வசூலிப்பார்கள்.
ஒரு தசரா குழு ஏன் அமைக்கப்படுகிறது என்பதுபற்றி குலசை முத்தாரம்மன்
கோயில் முன்னாள் அறங்காவலரும் தாண்டவன்காடு அம்பிகை தசராக் குழுவின் உறுப்பினருமான வே.கண்ணன் பேசியதில்... ''முன்பு எல்லாம், ஒரு ஊர்ல ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் மாலை போட்டு வேஷம் கட்டிட்டுக் கோயிலுக்குப் போவாங்க. ஆனால், அம்மன் அருளால் இப்போ ஒரு ஊர்ல இருந்து நெறைய பேர் வேஷம் கட்டுறாங்க. அதனால, எல்லோரும் தனித்தனியாகக் கோயிலுக்குப் போறதைவிட ஒரு குழுவை அமைச்சு எல்லோரும் ஒற்றுமையாபோனா நல்லதுங்கிற நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தசராகுழு.

No comments:
Post a Comment